சென்னை:-அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார்.
அப்போது 24–4–2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.அதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி