காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். நயன்தாராவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். அதுவும் முறிந்து போனது. டி.வி. நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்று பேசிய அவர் சினிமா பிடிக்கவில்லை என்றார். அவர் கூறியதாவது:–சினிமாவில் எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். எனவே படப்பிடிப்புகளில் நடக்கும் தவறுகளை உடனே கண்டுபிடித்துவிடுவேன். தற்போது சினிமா எனக்கு பிடிக்கவில்லை. சினிமாவை தாண்டி வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசிக்கிறேன்.
ரஜினிசார் மாதிரி ஆக வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது ஆசையாக இருந்தது. ஆனால் 29 வயதுக்கு மேல் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கிறது. சினிமா என்ற வட்டத்துக்குள் சிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதில் இருந்து வெளியேற நினைக்கிறேன். சினிமாவை தாண்டி ஏதாவது செய்ய வேண்டும். பணம் பிடிக்கவில்லை. பணம் நல்லவர்களையும் கெட்டவர்கள் ஆக்குகிறது. மனிதாபிமானம் இல்லை. பொறாமை இருக்கிறது. இதற்கெல்லாம் பணம்தான் காரணம். சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையு-ம் எனக்கு கிடையாது.இவ்வாறு சிம்பு கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி