சென்னை:-முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.இச்சந்திப்பின்போது பேசிய கருத்துகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று எதிர்பார்ப்பிலிருக்கும் இந்நிலையில் இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி