ஒரு கட்டத்தில் அசோக் மீது நாயகிக்கும் காதல் வருகிறது. அந்த நேரத்தில் அவர்கள் கம்பெனி முதலாளியின் மகன் கௌதமுக்கும் இறந்துபோன தன் காதலிபோல் இருக்கும் நாயகி மீது காதல் வருகிறது. கௌவுதமும், அசோக்கும் நல்ல நண்பர்கள். இந்த சூழலில் யாருடைய காதல் வெற்றி பெற்றது? யார் யாருடன் சேர்ந்தார்கள்? என்பது மீதி கதை.படத்தில் வரும் பாதிக் காட்சிகள் பார்த்து, சலித்து புளித்துப் போனவை. முதல் காட்சியிலிருந்தே சுவாரஸ்யமில்லாமல் நகரும் இப்படத்தை இரண்டரை மணி நேரத்திற்கு இழுத்திருக்க வேண்டிய அவசியம்தான் என்னவோ?
இது காதல் கதையா? காமெடி கதையா? ஆக்ஷன் கதையா? இல்லை லட்சியக் கதையா? என படம் பார்க்கும் அத்தனை ரசிகர்களையும் குழப்பியடித்திருக்கிறார் இயக்குனர்.
லேக்காவின் பின்னணி இசை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பாடல்களும் அடிக்கடி வந்து எரிச்சலூட்டுகின்றன. ஒளிப்பதிவு மட்டுமே கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கிறது!
நாயகன் அசோக், இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். ஏற்கெனவே ‘கோழி கூவுது’ படத்திலும் நல்ல பாராட்டை பெற்றவர். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது அசோக்கிற்கு.நாயகி வாஸ்னா அஹ்மது நல்ல கலையான முகம். முதல் பாதி முழுக்க புடவையில் குடும்பப்பாங்காக வந்து ரசிக்க வைக்கிறார். இருந்தாலும் மனதை கவரும்படியான காட்சிகள் இல்லை. கௌதமாக நடித்துள்ள மது நல்ல தேர்வு. இது தவிர ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரவி ராகவேந்தர் ஆகியோரும் தங்கள் பங்குக்கு நடித்துள்ளனர்.
மொத்தத்தில் ‘காதல் சொல்ல ஆசை’ www.imdb.eniyatamil.com வழக்கமான காதல்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி