இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார். உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது. அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன்.
அருகில் இருந்த சக நடிகர்களும் ம்… வெளுத்துக்கட்டு என்று ஊக்கப்படுத்தினார்கள். காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன். இதைப்பார்த்த பட யூனிட்டார், அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர். ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி