நியூசிலாந்தில் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பெண்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காக மதுரிமாவை ஓட்டலில் தங்க வைக்கவில்லை. வீடு எடுத்து கொடுத்தோம். ஆனால் மதுரிமா நடவடிக்கைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தது. தனியாக வெளியே போனார். படப்பிடிப்புக்கு நேரத்துக்கு வருவது இல்லை.வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த நிறைய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு காட்சியை படமாக்குவதற்கு அரசிடம் அனுமதி பெறவேண்டும். எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த போகிறோம், எந்த நேரத்தில் நடத்துகிறோம் என்ற விபரத்தையெல்லாம் தெரிவித்துவிட்டுதான் சூட்டிங் நடத்துவோம்.
காலை 7 மணிக்கு படப்பிடிப்பு துவங்கும். அந்த நேரம் அவர் வருவது இல்லை. இஷ்டப்படி தாமதமாக வந்தார். ஹாலிவுட் கேமராவை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு டெக்னீஷியன்களை வைத்து படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போதும் குறித்த நேரத்துக்கு அவர் வருவது இல்லை. இதனால் தயாரிப்பாளர் எரிச்சல் பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.மதுரிமா கூறும்போது ஒப்பந்தப்படி எனக்கு சம்பள அட்வான்ஸ் பணத்தை அவர்கள் தரவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி