செய்திகள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய ஆங்கில இதழ் விரைவில் அறிமுகம்!…

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய ஆங்கில இதழ் விரைவில் அறிமுகம்!…

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய ஆங்கில இதழ் விரைவில் அறிமுகம்!… post thumbnail image
ஆப்கானிஸ்தான்:-அல்கொய்தா தீவிரவாத இயக்கம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் இருந்து ரகசியமாக இயங்கி வருகிறது. உருது மொழியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை நடத்தி வரும் அல்கொய்தா, தற்போது ஆங்கில மொழியில் பத்திரிகை வெளியிட இருக்கிறது.

முதல் பிரதியில் அமெரிக்கா சிரியா நாட்டின் மீது எடுத்திருக்கும் போர் நடவடிக்கை குறித்துவிமர்சித்து கட்டுரை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பின்லேடனின் அட்டைப்படத்துடன் இந்த பத்திரிகை வெளிவரவுள்ளதாக அல்கொய்தா தெரிவித்துள்ளது.அல்கொய்தாவின் ஆங்கில பத்திரிகை அறிமுகம் ஆவதை யூடியூப் இணையதளத்தில் அறிவிப்பு ஒன்றையும் வீடியோ மூலம் இந்த இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த பத்திரிகையில் ஜார்ஜ் புஷ் குறித்த கட்டுரைகள், அமெரிக்க ராணுவ வீரர்களின் அத்துமீறல் குறித்த செய்திகள், பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் குண்டுவெடிப்புகள் போன்ற செய்திகளை படங்களுடன் விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பத்திரிகையின் ஆசிரியர் யார்? எங்கு அச்சாகிறது என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி