ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள். சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர். அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர்.ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு ரஜினி தனது அரசியல் முடிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.அவர் கூறும் போது எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது. ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது. தனுஷ் என் தந்தை போல இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை மணந்தேன்.3 படத்தில் தனுசை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தேன். எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி