விஷயம் இப்படியிருக்க சில விநியோகஸ்தர்களோ சத்தியமா இந்த படம் என் தியேட்டர்ல சரியாவே ஓடல எனக்கு நஷ்டம் ஆயிடிச்சுன்னு சொல்லி ரஜினி வீட்டை முற்றுகை இட, வந்தவர்களை உட்காரவைத்து விவரத்தை அறிந்து அவர்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்று கூட ஆராயாமல் சில லட்சங்களை கொடுத்து அனுப்பி வைக்கிறாராம்.இதை பார்த்த ஒரு நல்ல மனம் உள்ள விநியோகஸ் ஒருவர் ரஜினியை தொடர்பு கொண்டு உங்க படம் ஓடலைன்னு சொல்றது பொய் எல்லா ஏரியாவிலும் படம் நல்லா தான் போகுது உங்களை ஏமாற்றிவிட்டு போகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ரஜினி விசாரித்ததில் நல்ல மனம் கொண்ட விநியோகஸ்தர் சொன்னது உண்மை என புரிந்து இனி அந்த தப்பை பண்ணக்கூடாது என முடிவு எடுத்திருக்கிறார்.
அதாவது கோச்சடையான் படத்தின் வியாபார வேலைகள் தொடங்கிவிட்டன. படத்தை விநியோகஸ்தர்களிடம் விற்கும் போது அக்ரிமெண்டில் தெளிவாக இந்த படம் லாபம் அடைந்தாலும் நட்டம் அடைந்தாலும் அதற்கு ரஜினி பொறுப்பேற்க மாட்டார் என எழுத சொல்லியிருக்கிறாராம். இதனால் ரஜினி வீட்டுக்கு நட்ட கணக்கை எடுத்து செல்லும் விநியோகஸ்தர்கள் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் ரத்த கண்ணீர் வடிக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி