செய்திகள்,திரையுலகம் போட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி!…

போட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி!…

போட்டோகிராபர்களை பார்த்ததும் பயந்து ஓடிய ஆர்யா – அனுஷ்கா ஜோடி!… post thumbnail image
சென்னை:-சக நடிகர்களே பொறாமைப்படும் ஹீரோ என்றால் அது ஆர்யா தான்.அந்தளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அப்படியே பிராக்கெட் போட்டு கொத்திக் கொண்டு போவதில் கில்லாடி . இதுவரை ஆர்யா நடித்த படங்களில் அவருடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை. அது எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களிடம் கடைபோட்டு அவர்களை அப்படியே தன்வசப்படுத்தி விடுவார். அப்படிப்பட்ட வசியத்தில் தான் இப்போது ஆர்யாவிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் சேர்ந்து நடித்த போதே இரண்டு பேருக்குள்ளும் கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட்டாகி விட்டது. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால் ஆர்யாவும் , அனுஷ்காவும் அப்படி ஒரு காதல் மயக்கத்தில் சொக்கிப் போய் கிடந்தார்கள். படப்பிடிப்புத் தளங்களில் பலபேர் முன்னிலையில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.ஆனால் எப்போது மீடியாக்களை சந்தித்தாலும் இதைப் பற்றி வாயே திறக்காத ஆர்யாவும், அனுஷ்காவும் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அருகில் உள்ள ஹயாத் பைவ் ஸ்டார் ஹோட்டலில் மீடியாக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.சத்யம் தியேட்டரில் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடந்து முடிந்ததும், நண்பகல் 12 மணிக்கு ஹயாத் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு ‘கோச்சடையான்’ படத்தின் பிரஸ்மீட் நடப்பது தெரியாத ஆர்யாவும்- அனுஷ்காவும் சுமார் 12 : 30 மணியளவில் ஜோடியாக ஹோட்டலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.புளு கலர் டிசர்ட்டும்,சாக்லேட் கலர் அரைகால் டவுசரையும் போட்டிருந்தார் ஆர்யா, அனுஷ்கா ஒயிட் கலரில் டீசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தார். இரண்டு பேருமே யாரையும் கண்டுகொள்ளாமல் மிக நெருக்கமாக சிரித்து சிரித்து பேசிக்கொண்டே வந்தார்கள்.ஹோட்டலின் வாசலை விட்டு வெளியே வரும்போது இருவரிடத்திலும் ஹோட்டல் செக்யூரிட்டி ஒருவர் ஆர்வமாக ஆட்டோகிராப் வாங்கினார். அப்போது சுற்றும் முற்றும் பார்த்த அனுஷ்கா கேமராவுடன் சில போட்டோகிராபர்கள் வாசலில் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். உடனே பதட்டத்தோடு தனது கையில் உள்ள கேலக்ஸி நோட்பேடால் முகத்தை மூடிக்கொண்ட அனுஷ்கா எங்கே இருவரையும் சேர்த்து போட்டோ எடுத்து விடுவார்களோ? என்ற பயத்தில் அருகில் நின்று கொண் டிருந்த ஆர்யாவுக்கு கண்ணாலேயே சிக்னல் கொடுத்தார். விபரீத்தை உணர்ந்த ஆர்யாவோ அனுஷ்காவை கூட்டிக்கொண்டு விறுவிறுவென்று பார்க்கிங் ஏரியாவை நோக்கி சென்று விட்டார்.

ஏற்கனவே இதே ஹோட்டலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரஸ்மீட்டில் இதேபோல ஆர்யாவும், அனுஷ்காவும் மீடியாக்களிடம் மாட்டினார்கள். ஆர்யா அனுஷ்காவையும் விட்டு வைக்கவில்லை என்ற கிசுகிசு கோலிவுட்டில் பரபரப்பட்ட நிலையில் நேற்று அதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக வந்து மீடியாக்களிடம் மாட்டிக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி