லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார்.ஆனால் திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஒத்து போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்யாமல் அமண்டா தனியாக வசித்து வந்தார். ஆனால் தன்னுடன் ‘ஷீபா’ என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள லெப்லிட் நகரில் தனது செல்ல நாயை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் 200 பேர் கலந்து கொண்டனர்.
தனது நாயை திருமணம் செய்தது குறித்து கமண்டா கூறும்போது, ‘‘ஷீபா எனது வாழ்க்கையில் பல ஆண்டுகளாக உள்ளது. கவலையாக இருக்கும் போது என்னை சிரிக்க வைக்கிறது.அதற்கு கலைஞருக்கான குணம் மற்றும் தகுதிகள் உள்ளன. எனவே அதை திருமணம் செய்து கொண்டேன்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி