ஜாக்கிசானோ கீழே போடப்பட்ட பேப்பரை குனிந்து கையில் எடுத்துக்கொண்டு விறுவிறுவென குப்பைத்தொட்டியைத் தேடி நடக்க ஆரம்பித்தார். கமல் மட்டுமல்ல, நேரு உள் விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் ஜாக்கிசானின் செயலைக் கண்டு வியந்து போனார்கள். கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழாவிலும் அப்படியொரு காட்சி!… இப்படத்தின் இசையை ஷாருக்கான் வெளியிடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, மெகா சைஸில் செய்யப்பட்ட சிடி கவரை மேடைக்கு எடுத்து வந்தார்கள். அந்த சிடி கவரில் ரிப்பன் கட்டப்பட்டிருந்தது.
நின்று கொண்டே அதை அவிழ்க்க முடியாதநிலை ஏற்பட்டபோது, கொஞ்சம் கூட சங்கோஜப்படாமல் முட்டிக்கால் போட்டு உட்கார்ந்து ரிப்பனை அவிழ்க்க ஆரம்பித்தார் ஷாருக்கான். கோட் சூட் அணிந்தநிலையிலும் கொஞ்சமும் யோசிக்காமல் அவர் முழங்காலிட்டு உட்கார்ந்ததைப் பார்த்தபோது, தசாவதாரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஜாக்கிசான் நடந்துகொண்ட விதம் நினைவுக்கு வந்தது. நீ என்பது உடலா? உயிரா? பெயரா? மூன்றும் இல்லை, செயல்..! – என்ற கோச்சடையான் படத்தின் பாடல்வரிகளும் நினைவுக்கு வந்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி