படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு படமாகிறதாம். கூடவே சூர்யா-சமந்தா இணையும் பெரும்பாலான காட்சிகளையும் படமாக்குகிறாராம் லிங்குசாமி. ஆக அந்த ஷொட்டியூலோடு பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.
அதனால், அஞ்சானை ஆகஸ்ட் 15ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முன்னதாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15-ந்தேதி அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்களாம். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தோடு யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது. அதனால், யுடிவி தயாரிப்பில் உருவாகி வரும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வருவதால், அப்படத்தோடு அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி