பகையை மறந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அடிக்கடி சந்தித்தும் பேசுகிறார்கள். தற்போது கூடுதலாக விஜய்யையும், அணியில் சேர்த்துள்ளனர். இருதினங்களுக்கு முன் விஜய், சிம்பு, தனுஷ் மூவரும் சந்தித்தார்கள். நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். விருந்தும் சாப்பிட்டார்கள். சேர்ந்து நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த படத்தை சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டார். அதில் விஜய், தனுசை சந்தித்தேன். இனிய இரவாக அது இருந்தது. சினிமாவை பற்றி பேசினோம். இசை பற்றியும் விவாதித்தோம். நண்பர்களையும் நினைவு கூர்ந்தோம். நாங்கள் சேர்ந்து இருந்த நேரம் மகிழ்ச்சியான தருணங்களாக அமைந்தது என்று சிம்பு கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி