ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இருந்ததால் அவரையே கோச்சடையானுக்கும்பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் செளந்தர்யா.ஆக, அட்வான்ஸ் என்ற பெயரில் விட்டக்குறை தொட்டக்குறையாக ஒரு உறவு இருந்ததால் கோச்சடையானில் தீபிகா நடிக்க சாத்தியமானது. ஆக, கோலிவுட்டில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடித்து விட்ட பெருமையை பெற்றிருக்கிறார் தீபிகா.
இந்நிலையில, நேற்று கோச்சடையான் ஆடியோ விழாவுக்கு தீபிகா மங்களகரமாக வந்திருந்தார். தலை நிறைய பூ வைத்து புடவை கெட்டப்பில் வந்து அனைவரையும் கவர்ந்த தீபிகாபடுகோனே,
மேடையில் பேசும்போது, இந்த படத்தில் நான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். என்றாலும், அவர் என்னை ஒரு மகளைப்போல்தான் பார்த்தார்.
இருப்பினும் ரஜினியின் நாயகி என்ற பெருமையுடன் தமிழக ரசிகர்களை சந்திக்க வருவது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தமிழக ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி