இந்நிலையில், பிப்ரவரி மாதம் மத்தியில் அந்நிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மத்தியில் தொடங்கி 15 தினங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்துள்ள தாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. கடன் பத்திரங்களில் நடப்பு ஆண்டில் இதுவரை 500 கோடி டாலரை அந்நிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மை உள்ளிட்ட சூழல், மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அந்நிய நிதி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்து வருவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 2013ம் ஆண்டில் அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் ரூ.1.12 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு செய்திருந்தன. மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் அமையும் புதிய ஆட்சியை பொறுத்தே அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு கொள்கை அமையும் என்றும் பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி