கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் மாவட்டம் புல்பூர் தொகுதியில் முகமது கைப் நிறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:நான் அலகாபாத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தேன். அந்த நகர தெருக்களில் நான் கிரிக்கெட் விளையாடினேன். இந்திய அணிக்காக நான் விளையாடிய போது அலகாபாத் மக்கள் மிகவும் பெருமை அடைந்தனர். அதனால் நிச்சயம் எனக்கு அவர்கள் ஆதரவு அளிப்பார்கள். கிரிக்கெட்டை அடுத்து எனக்கு அரசியல் 2வது இன்னிங்ஸ் ஆகும்.
கிரிக்கெட்டில் எப்படி வெற்றி பெற்றேனோ அதேபோன்று அரசியலிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. சில நாட்களுக்கு முன் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் நான் 80, 70 ரன் எடுத்தேன். காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து புல்பூர் தொகுதியில் வேட்பாளராக என்னை தேர்வு செய்திருப்பதாக கூறினார். நான் அதனை ஏற்றுக் கொண்டேன். அந்த முக்கிய பிரமுகர் யார் என்று நான் சொல்ல மாட்டேன்.அரசியல் ஒரு சாக்கடை என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்களின் இந்த எண்ணத்தை நான் அரசியலில் நுழைந்து மாற்றி காட்டுவேன். இவ்வாறு கைப் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி