துபாய்:-ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் டோனி 6-வது இடத்திலும், ஷிகர் தவான் 8-வது இடத்தில் உள்ளனர்.
ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இலங்கையின் திரிமன்னே 39வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆசியக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்கா 11 இடங்கள் முன்னேறி 22வது இடத்தை பிடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி