இந்நிலையில், ஜில்லாவைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கயிருக்கும் படத்தை முதலில் தயாரிப்பதற்காக ஆர்.பி.செளத்ரியைத்தான் அணுகினார்களாம். ஆனால், இவர்கள் கொடுத்த பட்ஜெட் 28 கோடி என்றதும் ஆடிப்போய் விட்டாராம் அவர். அப்போது பட்ஜெட்டில் டைரக்டருக்கு எவ்வளவு சம்பளம் போட்டிருக்கிறது? என்று கேட்டவரிடத்தில் 8 கோடி என்று சொன்னதும், 8 கோடி பட்ஜெட்டில் வேண்டுமானால் படம் தயாரிக்கிறேன்.
28 கோடிக்கெல்லாம் என்னால் படம் தயாரிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.அதன்பிறகுதான் இந்த பட்ஜெட்டைக்கொண்டு எந்த தயாரிப்பாளரிடம் சென்றாலும் இதேமாதிரி கமெண்டுகள்தான் வந்து கொண்டிருக்கும் என்று முடிவெடுத்த விஷால், நான் நடிக்கிற படத்தை நானே தயாரிக்கிறேன் என்றாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி