இதை கவனித்த இயக்குனரின் உதவியாளர்கள் அவனை இழுத்துவந்து இயக்குனர் எதிரில் நிறுத்தினர். தர்மஅடி விழப்போகிறது என்று சிறுவன் அழத் தொடங்கினான். ஆனால் இயக்குனரோ உனக்கு நடிக்க இஷ்டமா என்றார். அழுகையை நிறுத்திவிட்டு நல்லா நடிப்பேன் சார் என்று நடித்துக் காட்டினான்.அவனது ஆர்வத்தை புரிந்துகொண்ட இயக்குனர் தன் படத்திலேயே அவனை நடிக்கச் சொன்னார். குழந்தை குற்றவாளிகள் (சைல்ட் கிரிமினல்ஸ்)பற்றிய கதையாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரின் தந்தையை அழைத்து அவரிடம் அனுமதி கேட்டபோது போலீசில் மகனை மாட்டிவிடத்தான் விசாரிக்கிறார்கள் என்று பயந்தார். அவரிடம் விளக்கி கூறியபின் சந்தோஷம் அடைந்தார்.திருட வந்த சிறுவனுக்கு அடித்த யோகத்தைபார்த்து பட குழுவில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். அவனுக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பாடு கொடுத்தனர். 2 மாதம் அவனுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது அவனுடன் சேர்ந்து அவனது நண்பர்கள் சிலரும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி