பெங்களூர்:-நடிகைகள் மனிஷா கொய்ராலா, கவுதமி, மம்தா மோகன்தாஸ் போன்றவர்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கீமோதெரபி சிகிச்சையால் கேன்சர் நோயால் பாதித்தவர்கள் உட்கொள்ளும்போது முடி கொட்டி விடுகிறது.
இதனால் மொட்டை அடித்துக்கொள்கின்றனர். இதைகண்டு சோகத்தில் ஆழ்ந்தார் கன்னட பட ஹீரோயின் நீது. தன்னால் முடிந்த அளவு கேன்சர் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணினார். இதற்காக தனது நீண்ட கூந்தலை இழக்க முடிவு செய்தார். பெங்களூரில் உள்ள பிரஸ் கிளப்புக்கு சென்ற நீது தனது தலையை மொட்டைஅடித்துக் கொண்டார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, கேன்சர் பற்றி விழிப்புணர்வை எல்லோரும் பெற வேண்டும். அதற்காக தீவிரமாக பிரசாரம் செய்ய எண்ணினேன். இதன் ஒரு பகுதியாக எனது தலையை மொட்டையடித்துக் கொண்டேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி