சென்னை:-விஸ்வரூபம் 2 பட வேலைகளை முடித்து விட்ட கமல், அடுத்து நடிக்கும், உத்தம வில்லன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்த படத்திற்கு, கதை, திரைக்கதையை கமலே எழுதுகிறார்.
இதில்,கமலுடன் நடிக்கும்,நடிகர்- நடிகையர் பட்டியல், சஸ்பென்சாக வைக்கப் பட்டுள்ளது. மேலும், படத்தில் கமல் எந்த மாதிரியான வேடத்தில் தோன்றுகிறார் என்பதை, படத்தின் முதல் போஸ்டர் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளனர்.
அதில், கூத்துக் கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுபடுத்தும் வகையில், கமலின் தோற்றத்தை வெளியிட்டு இருப்பவர்கள், டைட்டிலில் வில்லுப்பாட்டு இசைகலைஞர்கள் பயன்படுத்தும், வில் இசைக் கருவியின் சாயலில் எழுத்து களை வடிவமைத்துள்ளனர். இந்த படம், சரித்திர கால கதை பின்னணியில் உருவாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி