செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றமாக இதுவரையில் பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுந்த ஜில்லா, வீரம் போன்ற படங்கள் இம்முறை பாக்ஸ் ஆபீசில் இடம் பெறவில்லை. மாறாக கடந்த வாரம் வெளியான பல படங்கள் நல்ல வசூல் பெற்று பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை வல்லினம் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…

6.கோலி சோடா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த கோலி சோடா திரைப்படம் இவ்வார இறுதியில் பாக்ஸ் ஆபீசில் சற்று பின்தங்கி சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ.2,17,948 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்று பின்தங்கியது.
5.ஆஹா கல்யாணம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த ஆஹா கல்யாணம் திரைப்படம் இவ்வார பாக்ஸ் ஆபீசில் சென்னையில் மொத்தம் 148 ஷோவ்கள் ஓடி ரூ.12,61,150 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றுள்ளது.
4.பிரம்மன்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த சசி குமாரின் பிரம்மன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 200 ஷோவ்கள் ஓடி ரூ. 25,27,140 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்று பின்தங்கியது.
3.தெகிடி:-
கடந்த வாரம் எதிர்பார்ப்பின்றி வெளியான தெகிடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சென்னையில் மொத்தம் 102 ஷோவ்கள் ஓடி ரூ.18,41,648 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்றுள்ளது.
2.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 248 ஷோவ்கள் ஓடி ரூ.47,66,832 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.வல்லினம்:-
கடந்த வாரம் எதிர்பார்ப்புடன் வெளியான வல்லினம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 123 ஷோவ்கள் ஓடி ரூ.35,72,052 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி