அப்போது அங்கு வந்த தலைமைக்காவலரான பகத்சிங் யாதவ் அவரது காரை அங்கிருந்து எடுக்கும்படி கூறியுள்ளார். தனது குடும்பத்தினரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதால் அதைப் பேசிவிட்டு சில நிமிடங்களில் தனது காரை அங்கிருந்து எடுப்பதாக அவானா கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த காவலர் அபராத சீட்டினை அளிப்பதாகக் கூறியுள்ளார். இதனை இதனை ஏற்றுக்கொண்டு தன்னுடைய கார் கண்ணாடியை இறக்கிய போது அவரை பேசவிடாமல் பகத்சிங் அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதனை எதிர்பார்க்காத அவானா மூச்சுக்காகத் திணறியபோதும் மறுபடியும் அதேபோல் அந்தக் காவலர் தாக்கியுள்ளார்.
தகவல் அறிந்த அவானாவின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அங்கு கூடினர். செய்தி அறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பகத் சிங்கை உடனடியாகப் பணியிலிருந்து நிறுத்தி வைத்தனர். அந்தப் பகுதியின் துணைக் கோட்ட நீதிபதி ஒருவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவானா இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை.காவலர் பகத் சிங் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைப் பார்வையிட்ட கவுதம் புத் நகரின் மூத்த காவல்துறைத் தலைவரான பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி