மும்பையில் வாழ்ந்து வந்த ஹன்சிகாவின் 81 வயது பாட்டி, நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தாராம். நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி என்று கூறியதால் அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். ஹன்சிகா மீது அவரது பாட்டி அளவுகடந்த பாசம் வைத்திருந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
ஹன்சிகாவின் சென்னை மற்றும் மும்பை தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஹன்சிகா இன்று மும்பையில் நடக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்று அவரது மேலாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி