மாநில முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இந்தியாவின் கால்பந்து நட்சத்திரம் பாய்சங் பூட்டியா மற்றும் திரைப்பட நடிகை சுசீத்ராசென்னின் மகள் மூன்மூன் சென் மறறும் மம்தாவி்ன் நெருங்கிய உறவினர் அபிஷேக் பானர்ஜி மற்றும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உறவினர் சுகதா போஸ் ஆகியோருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள்மட்டுமல்லாது பாடகர்களுக்கும் எம்.பி..யாகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெறறி பெறகூடியவர்கள் என தெரிவித்தார். இத்துடன் கடந்த 2009-ம்ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது திரிணமுல் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் 11பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி