செய்திகள்,திரையுலகம் மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…

மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…

மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!… post thumbnail image
சென்னை:-தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் அதிகம் பேசப்பட்ட ஜோடி சிம்பு – த்ரிஷா. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.

கௌதம் மேனன் படத்திற்குப் பின்பு செல்வராகவன் இயக்கும் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய ‘ஆடவாரி மாட்டல்க்கு அர்தாலே வேறுலே’ படத்தில் த்ரிஷா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழில் ‘யாரடி நீ மோகினி’யாக ரீமேக்கானது.

மேலும் இந்தப் படத்தின் மூலம் ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு மீண்டும் செல்வராகவன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி