மோகன்லால் கேரக்டரில் கமல் நடிக்கும் இந்தப் படத்தில் மீனா கேரக்டரில் யார் நடிக்க வைப்பது என்பது தான் பெரிய விஷயமாக மாறியிருக்கிறது. முதலில் மீனாவே கமல் ஜோடியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மீனாவை கமல் விரும்பாததால் நதியாவை நடிக்க வைக்கலாம் என்று தகவல் வெளியானது. அவரும் இல்லை என்று சொன்னவுடன் கடைசியாக சிம்ரன் நடிப்பார் என்று சொன்னார்கள். கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து இந்த செய்திகள் மீடியாக்களில் வெளியானது.இந்நிலையில் தான் த்ரிஷ்யம் படத்தில் கமலுடன் சேர்ந்து நடிக்க வில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் நடிகை சிம்ரன். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :
நான் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் நான் த்ரிஷ்யம் படத்தின் எந்த மொழியிலும், எந்த ரீமேக்கிலும் நடிக்கவில்லை. அப்படி நான் ஏதாவது படத்தில் நடிப்பதாக இருந்தால் நானே மீடியாக்களுக்கு சொல்லுவேன் என்று கூறியிருக்கிறார்.இதன் மூலம் கமலுடன் சிம்ரன் ஜோடி சேரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி