அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?….

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி?…. post thumbnail image
சென்னை:-தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய இருப்பதாக அரசியல் அரங்கில் நேற்று மாலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் கிட்டத்தட்ட தங்களது கூட்டணியை இறுதிசெய்து விட்டன.

தி.மு.க. தங்களது கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் நேற்றுடன் தொகுதி பங்கீட்டை முடித்து உள்ளது. பாரதீய ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திடீரென்று சிங்கப்பூர் சென்று விட்டதால், பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தே.மு.தி.க. தங்களது முடிவை அறிவிக்க பாரதீய ஜனதா கெடு விதித்தது.

இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து திரும்பிய விஜயகாந்த், கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. பாரதீய ஜனதா தரப்பு தங்களது கூட்டணி குறித்து நேற்று முழு முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தது. ஆனால் விஜயகாந்திடம் இருந்து எந்த விதமான சாதகமான பதிலும் கிடைக்காததால், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரக்தி அடைந்தனர்.கூட்டணி குறித்து டெல்லியில் அறிவிப்பதாக கூறி அவர்கள் நேற்று மதியம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே, நேற்று மதியம் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு செல்ல இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளியாகியது.

‘இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் டெலிபோனில் பேச முயற்சி நடந்ததாகவும் ஆனால், இனி கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் விஜயகாந்த், கோபாலபுரத்திற்கோ அல்லது அறிவாலயத்திற்கோ வர வேண்டும்’ என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசியல் அரங்கில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்பது குறித்து தே.மு.தி.க. தரப்பில் கருத்து கேட்க முயன்ற போது, அங்கிருந்து யாரும் இதுபற்றி பேச முன்வரவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி