அரசியல்,செய்திகள்,திரையுலகம் ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…

ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!…

ரஜினி – மோடி ரகசிய பேச்சு வார்த்தை!… post thumbnail image
சென்னை:-பாரதிய ஜனதா கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக கட்சிக்கும், பாமக கட்சிக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் கெடு விதித்துள்ளார். இரண்டு நாட்களுக்குள் மேற்கண்ட இரு கட்சிகளும் தங்கள் முடிவை அறிவிக்காவிட்டால், அவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று காட்டமாக அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 8 தொகுதிகளை விஜயகாந்தின் தேமுதிகவும், ராமதாசின் பாமகவும் கேட்பதால் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா தலைமையோ முதலில் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டு அதன்பிறகே தொகுதிகள் குறித்து பேசவேண்டும் என்றும், அதனால் கூட்டணியில் இருக்கிறார்களா? இல்லையா என்பதை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தேமுதிகவும், பாமகவும் அறிவிக்காவிட்டால் அதன்பிறகு அவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் மிரட்டல் தொணியில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் திடீர் மிரட்டலால் தேமுதிக, பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது. பாரதிய ஜனதா இவ்வளவு தைரியமாக அறிக்கை விடுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தபோது இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சமீபத்தில் நரேந்திர மோடி டெலிபோனில் பேசி தனது கூட்டணிக்கு ஆதரவு கேட்டார் என்றும், கண்டிப்பாக தேர்தலுக்கு முன் உங்கள் கூட்டணிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறேன் என்றும் உறுதியாக கூறியதால் பாரதிய ஜனதா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது என்றும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் , ம.தி.மு.க., கொங்குநாடு தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி