சென்னை:-உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி, மற்றும் இது கதிர்வேலன் காதல் ஆகிய இரண்டு படங்களுக்கும் தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க மறுத்தது. இந்த இரண்டு படங்களூம் அரசியல் காரணங்களுக்காகவே வரிச்சலுகை கொடுக்க தமிழக அரசு மறுக்கிறது என்றும், இந்த படங்கள் இரண்டுமே வரிச்சலுகை பெறுவதற்கு தகுதியுள்ள படம் என்றும் உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த இரண்டு படங்களை பார்த்து இந்த படங்கள் வரிச்சலுகை பெறுவதற்கு தகுதியுடைய படங்கள்தானா என்பதை அறிய ஒரு குழு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையை வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய இரண்டு படங்களுமே வரிச்சலுகை பெறுவதற்கு தகுதியான படங்கள் என்றும் தாராளமாக வரிச்சலுகை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசை எதிர்த்து வரிப்போர் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளதால், பொருளாதார ரீதியில் ஸ்டாலினுக்கு தற்போது மாபெரும் லாபம் கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி