படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த மூன்று மாத காலங்களாக ரமேஷ் அரவிந்த் மிகச்சிறப்பாக செய்து தயார் நிலையில் வைத்துள்ளார். எனவே படப்பிடிப்பு நேற்று ஆரம்பிக்க்கப்பட்டு, சரியாக ஏப்ரல் 13ஆம் தேதியுடன் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.அதன்பின்னர் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை பணியை ஒரே மாதத்தில் முடித்துவிட்டு ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தமவில்லன் படத்தில் கமல்ஹாசன் மற்றும் கிரேசிமோகன் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். என்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி