இந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆன பிறகு சுமாரான ரிசல்ட்தான் வந்தது. அதற்கு பிறகு நல்ல ஹிட் ஆகி, தற்போது மேலும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.18.25 கோடி ரூபாய். ஆனால் முதல் வாரத்தில் ரூ.15.50 கோடி வசூல் செய்துவிட்டது. தற்போது மேலும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருப்பதால் இதன் வசூல் இருமடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றியின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் பாலிவுட் சம்பளம் பெருமளவு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள்.
Window Seat Films தயாரித்திருக்கும் இந்த படத்தினை யூடிவி நிறுவனம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வசூலை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி