செய்திகள்,திரையுலகம் ஏ.ஆர்.ரஹ்மானை பொதுநிகழ்ச்சியில் கேவலப்படுத்திய சூப்பர் ஸ்டார்!…

ஏ.ஆர்.ரஹ்மானை பொதுநிகழ்ச்சியில் கேவலப்படுத்திய சூப்பர் ஸ்டார்!…

ஏ.ஆர்.ரஹ்மானை பொதுநிகழ்ச்சியில் கேவலப்படுத்திய சூப்பர் ஸ்டார்!… post thumbnail image
மும்பை:-சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாலிவுட் திரைப்படம் Raunaq’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்த படத்தில் பாடல்களை மத்திய செய்தி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கபில்சிபல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான்கான், ரஹ்மான் இசை குறித்து பேசியபோது, மத்திய அமைச்சரின் பாடல்களுக்கு முன்னாள் ரஹ்மானின் இசை சாதாரணமாகிவிட்டது என்றும், அவர் ஒரு ஆவரேஜ் கம்போசர்தான் என்பது தெரிந்துவிட்டதாகவும் கூறினார்.மத்திய அமைச்சரின் பாடல் வரிகளை பாராட்ட வேண்டும் என்பதற்காக ஆஸ்கார் விருது வென்ற ரஹ்மானை இவர் கேவலைபடுத்திவிட்டதாக ரஹ்மானின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சல்மான்கான் தான் கூறிய கருத்தை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு கூறினேனே தவிர எனக்கு ரஹ்மான் இசைமீது மிகுந்த மரியாதை உண்டு தனது டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி