சமீபத்தில் ‘உக்ரம்’ படத்தின் டிரெய்லர் பார்த்த தனுஷ் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கினார்.இப்போது ‘உக்ரம்’ படம் பார்த்த விஜய்க்கும் ரீமேக் செய்யும் எண்ணம் வந்திருக்கிறதாம். சிம்புதேவன் இயக்கும் புதிய படத்துக்கு செப்டம்பர் மாதம் கால்ஷீட் தந்துள்ளார் விஜய்.அதற்கடுத்து எந்தப் படத்தில் விஜய் நடிப்பார் என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. சசிகுமார் இயக்கும் படத்தின் ஷூட்டிங் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
‘உக்ரம்’ ரீமேக்கில் விஜய் நடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், நடிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், தனுஷூம் விஜய்யும் சமீபமாக நெருங்கிப் பழகி வருகின்றனர். இருவரில் யார் வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்படலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி