செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படம் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் அமிதாப் பச்சன் நடித்த படம்!…

‘கோச்சடையான்’ படம் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் அமிதாப் பச்சன் நடித்த படம்!…

‘கோச்சடையான்’ படம் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் அமிதாப் பச்சன் நடித்த படம்!… post thumbnail image
சென்னை:-Bhoothnath என்ற பெயரில் ஒரு பாலிவுட் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பேயாக நடித்திருந்த இந்த த்ரில் காமெடி படத்தில் ஜூஹி சாவ்லா, அமன் சித்திக், ராஜ்பால் யாதவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அமிதாப்பச்சன் அதே பேய் வேடத்தில் நடிக்கிறார். Bhoothnath Return என்ற தலைப்பில் தயாராகிவரும் இந்த படத்தில் அமிதாப் ஒரு சிறுவனுக்கு உதவி செய்யும் பேயாக நடித்துள்ளார். ஒரு சின்னஞ்சிறு சிறுவன், கொடுமைகள் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராக செய்யும் சில செயல்களுக்கு பேயாக வரும் அமிதாப் உதவி செய்கிறார். செம காமெடியாக உருவாகியிருக்கும்.

இந்த படத்திலும் ஷாருக்கான் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் பொம்மன் இரானி, அனுராக் காஷ்யப், உஷா ஜதாவ் ஆகியோர்களும் நடித்துள்ளனர். விஷால்சேகர் மற்றும் சலீம் சுலைமான் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.நிதேஷ் திவாரி இந்த படத்தை தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இந்த படம் நாடு முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இதேநாளில்தான் ரஜினிகாந்தின் கோச்சடையான் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி