நேற்றைய படப்பிடிப்பில் ஜெயிலில் இருந்து வில்லன் நடிகர் டோட்டா தப்பிக்கும் காட்சிக்கும் படமாக்கப்பட்டன.அதன்பின்னர் விஜய் மற்றும் டோட்டா ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சிகளும் ஜெயில் வளாகத்தில் நடப்பது போன்றும் படமாக்கபட்டது. இந்த சண்டைக்காட்சியில் நடிக்கும்போது டோட்டா ஒரு ஷாட்டில் விஜய்யின் கன்னத்தில் நிஜமாகவே குத்திவிட்டார். இதனால் விஜய் உதட்டோரத்தில் ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பரபரப்பு அடைந்தனர். விஜய் முகத்தில் லேசாக பஞ்ச் வைப்பது போல் நடிப்பதற்கு தனது கை தவறி நிஜமாக குத்திவிட்டதாக கூறி விஜய்யிடம் வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்டதை அடுத்து பரபரப்பு அடங்கியது. விஜய்யின் காயத்திற்கு முதலுதவி செய்தபின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி