கடந்த 1992ஆம் ஆண்டு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட குனிகல் குதிரை பண்ணையை அவர் வாங்கினார். இங்கு 250 வருடங்களுக்கு முன்னால் திப்பு சுல்தான் காலத்திலிருந்தே தரமான உயர்ரகக் குதிரைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணையில் சேர்ப்பதற்காக ஏர் சப்போர்ட் என்ற பெயருடைய பந்தயக் குதிரையை ரூ.4 கோடி கொடுத்து மல்லையா வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வர்ஜினியா டெர்பி உட்பட ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தக் குதிரை 60 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டபின் பெங்களூருவின் இந்த குதிரைப் பண்ணையை சேர உள்ளது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட பெண் குதிரைகள் உள்ள இந்தப் பண்ணையில் அவற்றின் இனப்பெருக்கத்திற்கு ஏர் சப்போர்ட் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது 21 வயதிலிருந்து பந்தயக் குதிரைகளைப் பராமரித்துவரும் மல்லையா பூனவாலா குடும்பத்தினர், செட்டிநாடு குரூப் நிறுவனர் எம்ஏஎம் ராமசாமியை அடுத்து இந்தியாவில் உயர் குதிரை உரிமையாளர்கள் மற்றும் வளர்ப்பவர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றார்.இதுதவிர ராயல் சேலஞ்சர்ஸ் என்ற ஐபிஎல் அணியை வைத்துள்ள அவர் சில வாரங்களுக்கு முன்னால் நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலப் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு 14 கோடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.மல்லையாவின் பெரும்பாலான விளையாட்டு நடவடிக்கைகள் அவரது யுனைடட் புருவரிஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்போது யுனைடட் ரேசிங் மற்றும் பிளட்ஸ்டாக் ப்ரீடர்சின் 98 சதவிகித உரிமைகளை அவர் தனிப்பட்ட முறையில் தன்னிடத்தில் வைத்திருப்பதுவும் செய்தியாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி