செய்திகள்,திரையுலகம் தமிழில் ‘கேப்டன் அமெரிக்கா’!…

தமிழில் ‘கேப்டன் அமெரிக்கா’!…

தமிழில் ‘கேப்டன் அமெரிக்கா’!… post thumbnail image
ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் கேப்டன் அமெரிக்கா-தவின்டர் சோல்ஸர் என்ற பெயரில் அதிரடி ஆக்ஷன் படம் தயாராகியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான கேப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941–ல் வெளியானது. அந்த தொடரின் தொடர்ச்சியாக இப்படம் வருகிறது. அன்டோனி ஜோரஸ்ஸோ இயக்கியுள்ளார். கிரிஸ் ஈவன்ஸ், ஸ்கார்லட் ஜோகன்ஸன், செபஸ்டின் ஸ்டன் நடித்துள்ளனர்.

நியூயார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசிக்கிறார். நவீன உலகிற்கும் பழகி வருகிறார். தன் சகாவுக்கு ஒரு ஆபத்து நேர்கிறது அவரை காப்பாற்ற ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர்நோக்க நேர்கிறது.

தனக்கு எதிரான சக்திகளை முறியடித்து தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக்வுடோ பால்கன்வுடன் இணைந்து போராடுகிறார். அழிவு சக்திகள் எப்படி அழிக்கப்படுகிறது என்பது கதை, ஏப்ரல் 4–ந்தேதி அமெரிக்காவில் இப்படம் வெளியாகும் அதே நாளில் தமிழில் கேப்டன் அமெரிக்கா எதற்கும் அஞ்சாதவன் என்ற பெயரில் ரிலீசாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி