மும்பை:-இந்தி நடிகர் அமீர்கான் அரசியலில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதில் அளித்து அமீர்கான் கூறியதாவது:–நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்க வில்லை.
யாருடனும் கூட்டு சேரவும் இல்லை. அரசியலை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன். பிரச்சினைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு என் சப்போர்ட் இருக்கும். ஆனால் எந்த கட்சியோடும் சேர மாட்டேன். நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன்.
நெஞ்சை நெகிழ வைக்கும் சோகமான கதைகள் கேட்டால் நான் அழுது விடுவேன்.டி.வி. நிகழ்ச்சியில் கூட நிறைய சோக கதைகள் கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் எனக்கு அழுகை வந்தது.இவ்வாறு அமீர்கான் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி