செய்திகள்,விளையாட்டு சுயசரிதை எழுதும் சச்சின்!…

சுயசரிதை எழுதும் சச்சின்!…

சுயசரிதை எழுதும் சச்சின்!… post thumbnail image
சென்னை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ஓய்வுக்கு பிறகு 2–வது முறையாக சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.ரெனால்ட்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற தெண்டுல்கர் கூறியதாவது:–

நான் எனது சுயசரிதை எழுதும் பணியை தொடங்கிவிட்டேன். அதில் உள்ள விவரங்களை இப்போது தெரிவிக்க இயலாது. அப்படி தெரிந்தால் யார்தான் எனது சுயசரிதை புத்தகத்தை படிப்பீர்கள். நேரம் வரும்போது அதில் இடம் பெற்றுள்ள தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள அறிவு பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் தெண்டுல்கர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரி மாணவ– மாணவிகளை பாராட்டினார்.

‘டைஸ் 2016’–க்கான பேனரை அவர் வெளியிட்டார். விழாவில் தெண்டுல்கர் பேசுகையில், மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறினார்.வேலம்மாள் கல்வி குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், தெண்டுல்கருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி