பங்களாதேஷ்:-இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி வங்காள தேசத்துக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 19–வது செஞ்சூரி ஆகும். தனது 124–வது இன்னிங்சில் அவர் 19–வது சதத்தை கடந்தார்.
இதன் மூலம் அவர் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார். கெய்ல் 189 இன்னிங்சில் 19–வது சதத்தை தொட்டு இருந்தார். வங்காள தேசத்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். அவர் 122 பந்தில் 136 ரன்கள் குவித்தார். இதற்கு முன்பு கங்குலி 2000–ம் ஆண்டு 135 ரன் எடுத்திருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி