பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கையை சந்திக்கிறது. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ் ‘பீல்டிங்’ தேர்வு செயதார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் அளித்தது. மாத்யூஸ் பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்த தவான், தொடர்ந்து மலிங்கா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். சேனநாயகே ‘சுழலில்’ ரோகித் சர்மா (13) ‘பெவிலியன்’ திரும்பினார்.
கோஹ்லி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் (94) சத வாய்ப்பை இழந்தார். ராயுடு (18), தினேஷ் கார்த்திக் (4), பின்னி (0) நிலைக்கவில்லை. அஷ்வின் (18), புவனேஷ்வர் (0) விரைவில் வெளியேறினர். இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா (22), ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி