படம் பற்றி சந்தோஷ் சிவன் கூறியதாவது: யுத்தம் நடக்கும்போது, அங்கு மோதும் இரண்டு மனிதக் கூட்டங்களை மட்டுமே பார்க்கிறோம். போரின் வெற்றி, தோல்விகளுக்கு நடுவில் நசுங்கும் மனிதநேயம் பற்றி யாரும் பார்ப்பதில்லை. அது பற்றிய படம்தான் இது. இலங்கையில் போர் காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை, சேனல் 4 வெளி உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. என் படம் யாருக்கும் எதிரானது அல்ல. ஒரு யுத்தத்தின் பின்னணியில் பூக்கும் காதல், புதிய உறவு, புன்னகை, பிறகு அவற்றின் பிரிவு, வேதனைதான் படம்.
இப்படியொரு இனம், இப்படியொரு சோகம், இப்படியொரு வாழ்க்கை நாம் வாழும் காலத்திலேயே இருக்கிறது என்பதை மற்றவர்களுக்குச் சொல்லும் படம். நம் கதையை நாம் சொல்லாவிட்டால், வேறு யார் சொல்வார்கள்? அதனால்தான் இந்தப் படத்தை எடுத்தேன். அடுத்த மாதம் ரிலீசாகிறது. இவ்வாறு சந்தோஷ் சிவன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி