மேலும் இந்த படம் விளையாட்டு வீரர் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்தியாவில் உள்ள முக்கிய விளையாட்டு வீரர்களான சச்சின், சானியா மிர்சா, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்று டைட்டில் கார்டில் போட முடிவு செய்திருக்கிறார் அறிவழகன். அஜித்தும் ஒரு மோட்டார் சைக்கிள் வீரர் என்பதால் அவருடைய பெயரையும் சேர்க்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக சம்மந்தப்பட்டவர்களிடம் முறையான அனுமதியையும் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் இசையை எஸ்.தமன் அமைத்துள்ளார். இந்த படத்தில் அதுல்குல்கர்னி, அனுபமா குமார், பிந்துமாதவி ஆகியோர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி