காஷ்மீர்:-தனது புதிய படமான ‘கைதர்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார் நடிகை தபு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது,அவருக்கு திடீரென்று சுவாசக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
கடுமையான ஜலதோஷத்தால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவர் அனுமதிக்கப்பட்ட காஷ்மீர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
படப்பிடிப்பு தளத்திலிருந்து 13கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் அன்று மாலையே வீட்டிற்கு திரும்பினார். இவர் கடைசியாக ‘ஜெய் கோ’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி