ஆரம்பநிலையில் அப்பா பெயரை விசிட்டிங் கார்டாகப் பயன்படுத்தி வ(ளர்)ந்த இந்த வாரிசுகள், ஒரு கட்டத்தில் தங்களுக்கென்று ரசிகர்களை சம்பாதித்துக்கொண்டனர்.குறிப்பாக, சூர்யா, விஜய், தனுஷ் போன்ற நடிகர்கள் அவர்களது அப்பாக்களையே மிஞ்சிய பிள்ளைகளாக வளர்ந்திருக்கின்றனர்.இந்த வளர்ச்சி நல்ல விஷயம்தான். ஆனால் இவர்களை வளர்த்தெடுத்த அப்பாக்களை எப்படி வைத்திருக்கிறார்கள் இவர்கள்?நந்தா படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்த சூர்யா சில வருடங்களிலேயே, அவரது அப்பா சிவகுமாரின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பித்துவிட்டார். அப்பாவின் வழிகாட்டல் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை.சில வருடங்களுக்கு முன்புவரை தன் அப்பா எஸ்.ஏ.சி.யின் சொல்பேச்சு கேட்டுவந்த விஜய், இப்போதெல்லாம் அவரது அப்பாவை சட்டைப் பண்ணுவதே இல்லை. கதை கேட்பது, கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது எல்லாமே விஜய்தான். போனால் போகிறது என்று பிரிவ்யூ ஷோவுக்கு எஸ்.ஏ.சி.யை கூப்பிடுவதோடு சரி. மற்றபடி அப்பாவுக்கு கட்டாய ஓய்வைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்துவிட்டார். அதனாலோ என்னவோ, தன் மகனைப் பற்றி குறிப்பிடும்போது ஆரம்பத்தில் அவர் இவர் என்று மரியாதையாகப் பேசி வந்த எஸ்.ஏ.சி. இப்போதெல்லாம் அது இது என்று குறிப்பிடுகிறார். விஜய் போலவே அப்பாவை ஒதுக்கி வைத்த மற்றொரு ஹீரோ தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் அவரை கதாநாயகனாக்கிய கஸ்தூரிராஜாவை, கடந்த சில வருடங்களாக தனுஷ் கண்டுகொள்வதே இல்லை. அதுமட்டுமல்ல, ரிடையர்ட் ஆகி வீட்டில் உட்காருங்கள் என்று சொல்லவும் ஆரம்பித்திருக்கிறாராம். ஒரு படவிழாவில் இந்தத் தகவலை வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டார் கஸ்தூரிராஜா.
சிம்புவும் ஏறக்குறைய தனுஷ் மாதிரிதான். டி.ராஜேந்தரை ரிடையர்ட் ஆகும்படி வெளிப்படையாக சொல்லவில்லையே தவிர, மற்றபடி எந்த விஷயத்திலும் டி.ராஜேந்தரை கலந்து ஆலோசிப்பதில்லை, அவரது கருத்தையும் கேட்பதில்லை.
ஜி.கே.ரெட்டி என்ற தயாரிப்பாளரின் மகனான விஷால், நடிகரானதே அவரது அப்பாவின் பணத்தில்தான். பிறகு அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தம்பியை தாங்கிப்பிடித்தார். சில வருடங்களாக விஷால் அப்பாவையும் மதிப்பதில்லை, அண்ணனையும் மதிப்பதில்லை. தனியாக வீடு பிடித்து தனிக்குடித்தனம் போய்விட்டார் விஷால். விஷாலைப்போலவே ஜீவாவும் பிரபல தயாரிப்பாளரின் மகன்தான். பல லட்சம் செலவு செய்து சொந்தப்படம் எடுத்து இவரை நடிகராக்கியவர் ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரி. ஆரம்பத்தில் அப்பா கிழித்த கோட்டைத் தாண்டாமல் இருந்த ஜீவா, கடந்த சில வருடங்களாக ஆர்.பி.சௌத்ரியிடம் முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. கதை கேட்பது தொடங்கி தன் கேரியர் தொடர்பான எந்தவொரு தகவலையும் தன் அப்பாவிடம் தெரியப்படுத்துவது கூட இல்லை. அந்தளவுக்கு ஆர்.பி.சௌத்ரியிடமிருந்து விலகிப்போய்விட்டார் ஜீவா. பாக்யராஜின் மகனான சாந்தனுவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் பாக்யராஜுக்கு சாந்தனு உரிய மரியாதை தருவதில்லை என்றே சொல்கிறார்கள்.ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தந்தையை மதிக்கும் தனயன்களாக இருப்பது பிரசாந்த், ஜெயம் ரவி இருவர் மட்டுமே.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி