மூன்று நாள் பயணமாக லெபனான் சென்ற ஏஞ்சலினா ஜோலி, அங்கு அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் 3,500 குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் லெபனான் பிரதமர் மற்றும் அதிபரை நேரில் சந்தித்து பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களை தொலைத்துவிட்டு வாடும் குழந்தைகளுக்கு தக்க உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
லெபானில் உள்ள சஹ்லே,பேகா வல்லே என்ற பகுதிகளில்தான் நூற்றுக்கணக்கான அகதிகள் முகாம்கள் உள்ளன. சிரியாவில் உள்நாட்டு போர் நடந்த போது அந்த நாட்டில் இருந்து வெளியேறிய அப்பாவி பொதுமக்கள் லெபனான் நாட்டிற்கு அகதிகளாக குவிந்துள்ளனர். லெபனானில் தற்போது ஐந்தில் ஒரு பங்கு மக்கள் அகதிகள்தான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏஞ்சலினா ஜோலி United Nations High Commissioner for Refugees என்ற அமைப்பில் முக்கிய பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி