இதையடுத்து தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். அந்த படத்திலும் அமலா பால் ஜோடி சேருகிறார். முதலில் வெற்றி மாறன் படத்தில் நடிக்க நயன்தாரா பரிசீலிக்கப்பட்டார். பின்னர் அவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளரை மலைக்க வைத்ததால், அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.வெற்றிமாறனின் புதிய படத்தில் தனுஷ் காட்டில் தேன் சேகரிக்கும் பாத்திரத்தில் நடிக்கின்றாராம். சில ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் மரம் ஏறி தேன் எடுக்கும் காட்சிகளில் தனுஷ் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கின்றது.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தி நடிக்கவுள்ளார். இந்த படத்திலும் தனுஷுக்கு கனமான கேரக்டர் என்பதால் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி