நவீனை மணக்கப்போகிறீர்களா? என்றதற்கு பாவனா கூறியதாவது: கடந்த 2 வருடமாக நான் ஒருவரை காதலிப்பது உண்மைதான். ஆனால் அவரை மணப்பதற்கு இன்னும் நான் ரெடியாகவில்லை. என் காதலன் யார் என்பதை இப்போதுசொல்ல மாட்டேன். அது என்னுடைய சொந்த விஷயம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். தற்போது, ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை முடித்துக்கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறேன் என்றார்.இதுபற்றி பாவனாவின் காதலன் என்று கிசுகிசுக்கப்படும் நவீனிடம் கேட்டபோது,நான் பாவனாவை காதலிக்கவில்லை. நான் தயாரித்த ரோமியோ என்ற கன்னட படத்தில் பாவனா நடித்தார். அப்போது இருவரும் நண்பர்கள் ஆனோம்.
புதிய படங்களில் வாய்ப்பு வந்தால் அதுபற்றி என்னிடம் ஆலோசனை கேட்பார். இருவரும் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்க முடியவில்லை. இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை. நீண்ட நாட்களாக நான் பாவனாவை சந்திக்கவும் இல்லை என்றார்.
பாவனாவின் திடீர் திருமணம் அறிவிப்பால் அவரை ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்கள் கோபம் அடைந்தனர். படத்தை முடித்துக்கொடுக்காமல் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்துத்தான் பாவனா தனது திருமண விஷயத்தில் திடீர் பல்டி அடித்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி